சொத்து உரிமையில் பெண்களுக்கும் சம உரிமை உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு முதலமைச்சர் வரவேற்பு
சொத்துரிமையில் ஆண் வாரிசுகளுக்கு நிகரான சம உரிமை பெண்களுக்கும் உண்டு என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சமூக நீதியை காப்பாற்றும் விதமாக வந்திருக்கும் இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதே போல் உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை இதய பூர்வமாக வரவேற்பதாகவும், இத்தீர்ப்பை தி.மு.க.வின் கொள்கைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகக் கருதுவதாகவும் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
மேலும் பெண்களுக்குச் சொத்தில் சமபங்கு உண்டு என்ற சட்டத்தை, 30 ஆண்டுகளுக்கு முன்பே - 1989-ம் ஆண்டே கொண்டு வந்து, நாட்டில் அரிய முன்மாதிரியை உருவாக்கியவர் கலைஞர் எனவும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) August 11, 2020
Comments