சிபிஎஸ்இ தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து 3.83 கோடி ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்ற மாணவி ஈவ் டீசிங்கால் உயிரிழந்த பரிதாபம்
அமெரிக்காவில் உயர்கல்வி பயிலும் மாணவி சொந்த ஊர் வந்திருந்த நிலையில், ஈவ் டீசிங்கால் உயிரிழந்த சம்பவம் உத்தரபிரதேசத்தில் அரங்கேறியுள்ளது.
தாத்ரி மாவட்டம் புலந்த்சாகர் பகுதியை சேர்ந்த சுதிக்ஷா, தனது கல்வி திறமையால் 3 கோடியே 83 லட்ச ரூபாய் ஸ்காலர்ஷிப் கிடைக்கப்பெற்று, அமெரிக்காவில் உள்ள பாக்சன் கல்லூரியில் உயர்கல்வி படித்து வந்தார்.
கொரோனா தாக்கத்தால் சொந்த ஊர் திரும்பியிருந்த மாணவி, தனது உறவினருடன் இருசக்கரவாகனத்தில் சென்ற போது, அவரை பிந்தொடர்ந்து வந்த சிலர் தங்கள் பைக்குகள் மூலம் சாகசம் செய்து ஈவ் டீசிங்கில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால், சுதிக்ஷாவும், அவரது உறவினரும் நிலைதடுமாறி கீழே விழுந்ததில் பலத்த காயமடைந்த மாணவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 2018ஆம் ஆண்டு சிபிஎஸ்இ தேர்விGautam Buddha Nagarல் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த மாணவி ஈவ் டீசிங்கால் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments