கட்சி மேலிடம் மன்னித்தால் காங். எம்எல்ஏக்களை வரவேற்பேன் - ராஜஸ்தான் முதலமைச்சர்

0 1584
காங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை வரவேற்பேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் மேலிடம் மன்னித்தால் சச்சின் பைலட் தலைமையிலான அதிருப்தி  எம்எல்ஏக்களை வரவேற்பேன் என்று ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார். 

சச்சின் பைலட் தலைமையில் 19 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்கொடி உயர்த்தியதால் ராஜஸ்தான் அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டது. இதனிடையே, ராகுல் காந்தியை  சந்தித்து பேசியபிறகு,  பைலட் தரப்பினரின் குறைகளை கேட்க  3 பேர்  குழுவை காங்கிரஸ் அமைத்துள்ளது.

இதனால் ராஜஸ்தானில் காங்கிரசுக்குள் நிலவிய மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக கூறப்படும்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய கெலாட், எதிர்ப்பு எம்எல்ஏக்களை மன்னிப்பதென கட்சி தலைமை முடிவு செய்தால், அவர்களை அன்புடன் அரவணைப்பேன் என்றார்.

சச்சின் பைலட்டை முன்பு எதற்கும் பயன்படாதவர் என விமர்சித்திருந்ததை சுட்டிக்காட்டி, அவருடன் எப்படி மீண்டும் இணைந்து பணியாற்றுவீர்கள் என்ற கேள்விக்கு கெலாட் நேரடியாக பதிலளிக்கவில்லை. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments