திரைப்பட படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க முடியாத சூழல் - அமைச்சர் கடம்பூர் ராஜு
திரைப்பட படப்பிடிப்புக்கு தற்போது அனுமதி வழங்க முடியாத சூழல் உள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.
மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தூத்துக்குடி மாவட்டம் கோவிந்தாபுரத்தை சேர்ந்த தொழிலாளர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களை நேரில் சந்தித்து அமைச்சர் கடம்பூர் ராஜு ஆறுதல் கூறினார்.
பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவரிடம் வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல்வர் வேட்பாளர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அமைச்சர், தேர்தலை பற்றி தற்போது சிந்திக்க நேரமில்லை எனவும், தற்போது முழு கவனமும் மக்களை காப்பதிலேயே இருப்பதாக தெரிவித்தார்.
Comments