முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்

0 3672
மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில், கொரோனா உறுதிப்படுத்தப்பட்ட முன்னாள் குடியரசுத்தலைவர் பிரணாப் முகர்ஜி கவலைக்கிடமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லியில் ராணுவ மருத்துவமனையில் பிரணாப் முகர்ஜிக்கு மூளையில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. மூளையில் ரத்தம் உறைந்து ஏற்பட்ட கட்டியை அகற்றுவதற்காக, வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

மேலும் அவருக்கு கொரோனா தொற்று இருப்பதும் உறுதி செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வென்டிலேட்டரில் வைக்கப்பட்டுள்ள பிரணாப் முகர்ஜியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுபற்றி அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ஏதும் இல்லை.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments