லெபனான் வெடிவிபத்தில் அதிகம் சேதமடைந்த இடங்களை அறிய செயற்கைக்கோள் படத்தை வெளியிட்டது நாசா
லெபனான் வெடிவிபத்தால் ஏற்பட்ட சேதத்தை செயற்கைக்கோள் தரவைப் பயன்படுத்தி வரைபடமாக நாசா வெளியிட்டுள்ளது. பெய்ரூட்டில் கடந்த 4 ஆம் தேதி ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
இந்த நிலையில், நாசாவின் அட்வான்சேட் ரேபிட் இமேஜிங் அண்ட் அனாலிசிஸ் குழு, சிங்கப்பூர் ஆய்வகத்துடன் இணைந்து, செயற்கைக்கோள் ரேடார் தரவுகளை பகுப்பாய்வு செய்து வரைப்படம் வெளியிட்டுள்ளது.
துறைமுகம் மற்றும் அதைச் சுற்றியுள்ள சிவப்பு நிறம், கடுமையான சேதத்தை குறிப்பதாகவும் வரைப்படம் மூலம் மக்களுக்கு உதவி தேவைப்படக்கூடிய இடங்களை அடையாளம் காண முடியும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.
Before and after SkySat imagery shows the impact of yesterday’s explosion in Beirut.
— Planet (@planetlabs) August 5, 2020
Imagery captured on May 31, 2020 and today, August 5, 2020. pic.twitter.com/8zCLDOZn4w
Comments