பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது
பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 101 அடியை எட்டியது. நீர்ப்பிடிப்பு பகுதியான வட கேரளா மற்றும் நீலகிரி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து, அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அணை நீர்மட்டம் வேகமாக உயர்ந்தது.
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 100.83 அடியாகவும், நீர் இருப்பு 29.3 டிஎம்சி ஆகவும் உள்ளது. அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 3431 கன அடியாக உள்ள நிலையில் அணையிலிருந்து பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக பவானி ஆற்றில் வினாடிக்கு 1200 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
அணையின் உயரம் 105 அடி என்றாலும் அக்டோபர் இறுதிவரை அணையில் 102 அடி வரை மட்டுமே நீர் தேக்கி வைக்க வேண்டும் என விதிமுறை உள்ளது.
அந்த அளவை எட்டிய உடன் உபரி நீர் திறக்கப்படும். முன்னெச்சரிக்கையாக, பவானிசாகர் மற்றும் சத்தியமங்கலம் பகுதியில் பவானி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு ஒலிபெருக்கி மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
Comments