காவிரியில் நீர்வெளியேற்றம் விநாடிக்கு 50,000 கனஅடியாகக் குறைந்தது

0 4277
கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றம், விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது.

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் நீர் வெளியேற்றம், விநாடிக்கு 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது. இதனால் ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கும் நீர்வரத்து சரிந்துள்ளது.

தென்மேற்குப் பருவமழை பொழிந்து, கர்நாடக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்ததால், பாதுகாப்பு கருதி, விநாடிக்கு ஒரு லட்சத்து 50 ஆயிரம் கனஅடி வரை, காவிரியில் நீர்வெளியேற்றப்பட்டது.

இந்த அளவு படிப்படியாகக் குறைந்து,  நேற்று இரவு 78 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி நீர் வெளியேற்றம் 50 ஆயிரம் கனஅடியாக குறைந்துள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து விநாடிக்கு 35 ஆயிரம் கனஅடி நீரும், கபினியில் இருந்து விநாடிக்கு 15 ஆயிரம் கனஅடி நீரும் வெளியேற்றப்படுகிறது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments