மருத்துவ கழிவுகளை சாலையோரம் கொட்டிய மியாட் மருத்துவமனைக்கு அபராதம்
மதுரையில் சாலை ஓரத்தில் மருத்துவ கழிவுகளை கொட்டிய மியாட் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மதுரை மாட்டுதாவணி பகுதியில் செயல்படும் மியாட் மருத்துவமனையிலிருந்து வெளியாகும் மருத்துவ கழிவுகள், மக்களுக்கு நோய் பரப்பும் வகையில் சாலை ஓரத்தில் கொட்டப்படுவதாக புகார் எழுந்தது.
இதையடுத்து அங்கு சென்று ஆய்வு நடத்திய மாநகராட்சி மற்றும் சுகாதார துறை அதிகாரிகள் பயன்படுத்தப்பட்ட மாஸ்க், பிபிஇ கவச உடைகள் உள்ளிட்ட மருத்துவ கழிவுகள் பொது இடத்தில் கொட்டப்பட்டிருப்பதை உறுதி செய்தனர்.
தொடர்ந்து நோய் பரப்பும் வகையில் செயல்பட்டதாக மியாட் மருத்துவமனை நிர்வாகத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்த அதிகாரிகள், இதுபோல் பொறுப்பற்ற முறையில் செயல்படும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தனர்.
Comments