ரிலையன்சில் சவூதி அராம்கோவின் முதலீடு வருவதில் தாமதம்
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனத்தில் சுமார் 1.14 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்வது குறித்து இப்போதுள்ள சூழலில் தீர ஆலோசித்த பின்னரே முடிவு செய்யப்படும் என உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி நிறுவனமான சவூதி அராம்கோ தெரிவித்துள்ளது.
ரிலையன்ஸ் பெட்ரோகெமிக்கல் நிறுவனத்தின் 20 சதவிகித பங்குகளை சவூதி அராம்கோ நிறுவனம் வாங்கும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முகேஷ் அம்பானி அறிவித்தார்.
ஆனால் கடந்த மாதம் நடந்த ரிலையன்ஸ் நிறுவனத்தின் வருடாந்திர கூட்டத்தில் பேசிய அவர் கொரோனாவால் எண்ணெய் துறை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால், திட்டமிட்ட காலத்தில் அராம்கோவின் முதலீடு வந்து சேரவில்லை என தெரிவித்திருந்தார்.
ரிலையன்சில் சவூதி அராம்கோவின் முதலீடு வருவதில் தாமதம் | #Reliance | #SaudiAramco https://t.co/gMk0rkwRwU
— Polimer News (@polimernews) August 11, 2020
Comments