வெடிவிபத்துக்கு பொறுப்பேற்று லெபனான் பிரதமர் ராஜினாமா

0 4883
லெபனான் நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

லெபனான் நாட்டு பிரதமர் ஹசன் தியாப் தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

தலைநகர் பெய்ரூட்டில் உள்ள துறைமுக கிடங்கில் கடந்த 4ம் தேதி நடைபெற்ற வெடிவிபத்தில், 160 பேர் உயிரிழந்த நிலையில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதன் காரணமாக அரசைக் கண்டித்து ஏராளமான பொதுமக்கள் சாலையில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டதில் கலவரம் ஏற்பட்டது.

அரசின் மீது நம்பிக்கையில்லை எனக்கூறி 3 அமைச்சர்கள் பதவி விலகினர். இந்நிலையில் தொலைக்காட்சியில் உரையாற்றிய பிரதமர் தியாப், தனக்கு முன்பு இருந்த ஊழல் அரசியல்வாதிகளே வெடி விபத்திற்கு காரணம் எனவும், லெபனான் மக்களை இறைவன் காப்பாற்றுவார் எனவும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments