பவளப்பாறை மீது மோதிய சரக்குக் கப்பல்.. 1000 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது..! சுற்றுச்சூழலுக்கு பெரும் கேடு

0 11120
மொரிஷியஸ் கடற்பகுதியில் 1000 டன் கச்சா எண்ணெய் கொட்டியதால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

மொரிஷியஸ் கடற்பகுதியில் 1000 டன் கச்சா எண்ணெய் கொட்டியதால் சுற்றுச்சூழலுக்கு பேரழிவு ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு பிரதமர் தெரிவித்துள்ளார்.

ஜப்பானைச் சேர்ந்த சரக்கு கப்பலான எம் வி வகாஷியோ என்ற கப்பல் மொரிசியஸ் கடல் பகுதிக்குள் சென்றிருந்தபோது பவளப்பாறை மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் கப்பலில் இருந்த 1000 டன் கச்சா எண்ணெய் கடலில் கொட்டியது. இதனைத்தொடர்ந்து கடலில் கலந்த கச்சா எண்ணையை அகற்றும் பணியில் ஆயிரத்திற்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தக் கப்பலில் மொத்தம் 4000 டன் கச்சா எண்ணெய் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் மீதமுள்ள கச்சா எண்ணையை எடுக்கும் பணிகளும் தீவிரமடைந்து வருகின்றன. இந்த நிலையில் கடலில் கொட்டப்பட்டுள்ள கச்சா எண்ணையால் பவளப் பாறைகளுக்கும் சதுப்புநிலக் காடுகளுக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாகவும், இது சுற்றுச் சூழல் அவசர நிலையை அறிவிக்க அரசாங்கத்தை தூண்டி உள்ளதாகவும் மொரிசியஸ் பிரதமர் ரவீந்திரநாத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments