விமான விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட 600 பேர் தனிமை
கோழிக்கோடு விமான விபத்தின்போது மீட்புப் பணியில் ஈடுபட்ட மலப்புரம் மாவட்ட ஆட்சியர் உட்பட 600 பேர் தனிமைக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
துபாயில் இருந்து 190 பயணிகளுடன் வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியபோது ஓடுபாதையின் முடிவில் தடுப்புச் சுவரை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் விழுந்து இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் விமானிகள் இருவர் உட்பட 18 பேர் உயிரிழந்தனர். காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்ற 56 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
14 பேர் தீவிரச் சிகிச்சைப் பிரிவில் உள்ளனர். இதனிடையே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மீட்புப் பணியில் ஈடுபட்ட மாவட்ட ஆட்சியர், தொழில் பாதுகாப்புப் படையினர், காவல்துறையினர், தீயணைப்புப் படையினர், உள்ளூர் மக்கள் என 600 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
Comments