தீவிரமடையும் அங்கொட லொக்கா வழக்கு..!

0 2252
இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இலங்கை கடத்தல் மன்னன் அங்கொட லொக்கா மரணம் தொடர்பான வழக்கில் மதுரை விமான நிலையத்தில் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அங்கொட லொக்காவிற்கு அடைக்கலம் கொடுத்த வழக்கறிஞர் சிவகாமி சுந்தரி, இலங்கையிலிருந்து வந்தவர்களை வரவேற்க அடிக்கடி மதுரை விமான நிலையத்திற்கு வந்து சென்றதாக கார் ஓட்டுநர் ஒருவர் தகவல் அளித்தார். அதனடிப்படையில் விமான நிலையத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்தனர்.

ஆனால் ஒரு மாதத்துக்கு உட்பட்ட சிசிடிவி காட்சிகள் மட்டுமே கைவசம் உள்ளதாகவும் முந்தைய காட்சிகளை மீட்க வேண்டும் என்றால் சென்னை விமான நிலைய ஆணையரகத்தில் அனுமதி பெற வேண்டும் எனவும் மதுரை விமான நிலையத்தில் தெரிவித்ததாக போலீசார் கூறினர். அதேபோல் அங்கோடா லொக்கா மதுரைக்கு வருகை புரிவதற்கு அளித்த ஆவணங்களையும், சென்னையில் உள்ள வெளிநாட்டு பிராந்திய பதிவு அலுவலகத்தின் ஒப்புதலுக்கு பிறகே பெற முடியும் என்பதால் அனுமதிக்கு பின்னர் விசாரணை தொடரும் என்று, கோவை டி.எஸ்.பி பரமசிவன் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments