' விஜய், சூர்யா வாழ்க்கை அழகிய ஓவியங்கள்' - மீரா மிதுனுக்கு பாரதிராஜா கடும் கண்டனம்
நடிகர்கள் விஜய், சூர்யா மீது தொடர்ந்து அவதூறு பரப்புவதாக நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதிராஜா கண்டித்துள்ளார்.
பிக்பாஸ் சீசன்- 3 நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை மீரா மிதுன். தமிழ் சினிமாவில் நெப்போட்டிஸம் பெரிய அளவில் உள்ளது என்றும் நடிகர்கள் விஜய், சூர்யா ஆகியோர் அனைவருமே நெப்போட்டிஸத்தின் தயாரிப்புகள் என்று மீரா மிதுன் கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால், கோபமடைந்த விஜய், சூர்யா ரசிகர்கள் மீரா மிதுனை சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர்.
ஆனாலும், நடிகர் விஜய் மனைவி சங்கீதா மற்றும் சூர்யா மனைவி ஜோதிகா ஆகியோரையும் அவதூறாகப் பேசி வீடியோ வெளியிட்டார். இந்த நிலையில் தனக்கு போன் செய்து சூர்யாவின் ரசிகர்கள் மிரட்டுவதாகவும் தனக்கு ஏதாவது நடந்தால் நடிகர் சூர்யா, விஜய்தான் பொறுப்பு என்றும் மீரா மிதுன் பேசி வந்தார். எனக்கு மிரட்டல் விடுப்பவர்கள் மீது போலீஸில் புகாரளிப்பேன் என்று மீரா மிதுன் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நடிகர்கள் விஜய், சூர்யா குறித்து அவதூறாக பேசியதற்கு நடிகை மீரா மிதுனுக்கு இயக்குநர் பாரதி ராஜா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். நடிகர்கள் விஜய், சூர்யா, ஆகியோரின் கண்ணியமான வாழ்க்கை நம் முன்னே கண்ணாடி போல இருக்கிறது.
மனிதாபிமான பணிகளை சத்தமில்லாமல் விஜய்யும் மாணவர்களுக்கு கல்வி அளிக்கும் பணியை சூர்யாவும் செய்து வருகின்றனர். அழகிய ஓவியத்தின் மீது சேறு பூசுவது போல சிலர் பேசுவது கண்டனத்துக்குரியது. நடிகர் சங்கம் உள்ளிட்ட எந்த சங்கமும் விஜய், சூர்யா பற்றி விமர்சிப்பவரை கண்டிக்காமல் இருப்பது வியப்பாக இருக்கிறது என்றார்
Comments