பார்வையாளர்களுக்கு தடை ; வருவாயும் இல்லை! சென்னையில் பட்டினியில் 2,000 முதலைகள்!

0 46115

கொரோனா லாக்டௌனால் மனிதர்கள் மட்டும் பசியால் வாடவில்லை. விலங்கினங்களும் கூட சரியான உணவுகள் கிடைக்காமல் தவித்து வருகின்றன. சென்னையில் முற்றிலும் அசைவம் மட்டுமே உண்ணும் முதலைகளும் வயிறார சாப்பிட முடியாமல் பட்டினியாக கிடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வளமான வனத்துக்கு புலிகள் அடையாளமென்றால், சுத்தமான நீர் நிலைகளுக்கு முதலைகள் அடையாளம். இந்தியாவிலேயே மிகப் பெரிய முதலைப் பண்ணை சென்னையிலிருந்து மகாபாலிபுரம் செல்லும் சாலையில் வடநெமிலியில் அமைந்துள்ளது. இதன் பெயர், Madras Crocodile Bank என்பதாகும் . கடந்த 1976 - ஆம் ஆண்டு வன உயிரின ஆர்வலர் Romulus Whitaker என்பவரால் இந்த முதலைப்பண்ணை தொடங்கப்பட்டது. இந்தியாவிலுள்ள முதலை வகைகளில் முக்கியமானதாக கருதப்படும் நன்னீர் முதலைகள், உ ப்பு நீர் முதலைகள் மற்றும் ஒல்லியான நீள வாயுடைய கரியல் ரக முதலைகள் இந்த பண்ணையில் பராமரிக்கப்படுகின்றன.

imageஇந்த பண்ணை தொடங்கப்பட்ட போது, 5000 முதலைகள் இங்கே இருந்தன. தற்போது, அவை இரண்டாயிரமாக குறைந்து போனது. ஆசியாவிலேயே மிகப் பெரிய இந்த முதலைப்பண்ணையான இதை பார்வையிட ஆண்டுக்கு 50 லட்சம் பேர் வருகை தருவார்கள். பார்வையாளர்கள் கட்டணம் வசூலிக்கப்படுவதால், இங்கே பராமரிக்கப்படும் முதலைகளுக்கு தட்டுப்பாடு இல்லாமல் எந்த தட்டுபபாடும் இல்லாமல் மாட்டிறைச்சி உள்ளிட்ட அசைவங்கள் வாங்கி உணவாக அளிக்கப்பட்டன.

ஆனால், கடந்த மார்ச் மாதத்திலிருந்து காட்சியே மாறி போனது. கொரோனா லாக்டௌன் காரணமாக முதலைப்பண்ணைக்கு பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. குறிப்பாக மாணவர்களுக்கு விடுமுறை காலமான ஏப்ரல், மே மாதங்களில் மட்டும் 10 லட்சம் பார்வையாளர்கள் இந்த முதலைப் பண்ணைக்கு வருகை தருவார்கள். இந்த கோடை காலத்தில் தடை காரணமாக பார்வையாளர்கள் வரவில்லை.

இதனால், முதலைப்பண்ணையில் முற்றிலும் வருவாய் குறைந்தது. கடும் நிதி நெருக்கடி காரணமாக முதலைகளுக்கு தேவையான அசைவ உணவுகளை வாங்கி அளிக்க முடியாத நிலைக்கு Madras Crocodile Bank தள்ளப்பட்டுள்ளது. இங்குள்ள 2000 முதலைகளுக்கும் வயிறார உணவு அளிப்பது என்பது எளிதான காரியமல்ல. இது குறித்து  மெட்ராஸ் முதலைப்பண்ணையின் இயக்குனர் ஆல்வின் ஜேசுதாசன் கூறுகையில், ''இன்னும் மூன்று அல்லது நான்கு மாதங்களுக்கு மட்டுமே நிதி மட்டுமே உள்ளது, வருமானத்தை ஈட்ட ஆன்லைனில் நன்கொடையை அதிகமாக பெற முடிவு செய்துள்ளோம் ''என்று தெரிவித்துள்ளளார்.

முதுலைப் பண்ணைக்கு நிதியுதவி செய்ய தமிழக அரசு முன் வர வேண்டும் என்கிற  கோரிக்கையும் எழுந்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments