மீதமுள்ள 27 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும்-மகேஷ்குமார் அகர்வால்
சென்னை மணலி கிடங்கில் மீதமுள்ள 27 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் அகற்றப்படும் என சென்னை காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தெரிவித்துள்ளார்.
கொரோனாவில் இருந்து மீண்டு, பணிக்கு திரும்பிய மயிலாப்பூர் துணை ஆணையர் செஷாங் சாயியை வரவேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களை சந்தித்தார்.
அம்மோனியம் நைட்ரேட் இருப்பு குறித்து பொதுமக்கள் அச்சமடைய தேவையில்லை என்றும், தீயணைப்பு துறை முன்னெச்சரிக்கையாக அங்கு பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.
செல்போன் பறிப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த காவல் ஆணையர், கடந்த மாதம் மட்டும் 32 வழிப்பறி கொள்ளையர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். வீடியோ கால் மூலம் பொதுமக்கள் குறைத் தீர்ப்பு முகாமிற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாகவும், குறிப்பாக பெண்கள் தங்கள் வீட்டிலிருந்தேபடியே வீடியோ கால் மூலம் உடனடியாக புகார்கள் அளித்து வருகின்றனர் என்றும் மகேஷ்குமார் அகர்வால் கூறினார்.
மீதமுள்ள 27 கண்டெய்னர் அம்மோனியம் நைட்ரேட் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் முழுமையாக அகற்றப்படும்-மகேஷ்குமார் அகர்வால் #Chennai | #maheshKumarAgarwal | #AmmoniumNitrate https://t.co/6ChsmFH9io
— Polimer News (@polimernews) August 10, 2020
Comments