இந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கும் திட்டம்-ரஷ்யாவைச் சேர்க்க இந்தியா முயற்சி
இந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலம் அமைக்கும் முயற்சியில் ஜப்பானையும் ரஷ்யாவையும் இணைத்துக் கொள்ள இந்தியா முயன்று வருகிறது.
இலங்கை, வங்கதேசம், மியான்மர் மற்றும் தென்கிழக்காசிய நாடுகளை இணைத்து இந்தோ பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு மண்டலத்தை ஏற்படுத்த இந்தியா திட்டமிட்டுள்ளது.
இந்தத் திட்டத்தில் ஜப்பானைச் சேர்த்துக் கொள்வது பற்றிக் கடந்த ஆண்டு ரஷ்யாவின் விளாடிவாஸ்டாக்கில் நடைபெற்ற சந்திப்பில் ஜப்பான் பிரதமர் சின்சோ அபேயுடன் பிரதமர் மோடி பேசினார்.
இந்நிலையில் சீனாவின் நெருங்கிய கூட்டாளியான ரஷ்யாவையும் இதில் இணைத்துக்கொள்ள இந்தியா முயன்று வருகிறது. இதற்காக ரஷ்ய வெளியுறவு இணையமைச்சர் இகோர் மொர்குலோவுடன் இந்திய வெளியுறவுச் செயலர் ஹர்ஷ் சிரிங்லா கடந்த நான்காம் தேதி பேச்சு நடத்தியுள்ளார்.
Comments