விமானம் தாமதமாக தரையை தொட்டது தான் விபத்துக்கு காரணமா?
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் தாமதமாக ஓடுதளத்தை தொட்டதே விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என விமானப் போக்குவரத்து இயக்குநரகத்தின் தலைவர் அருண் குமார் தெரிவித்துள்ளார்.
கோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதைக்கு தேவையான நீளம் உள்ளதாக குறிப்பிட்ட அவர், விமான கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள் அளித்த தகவலின் படி, 9 ஆயிரம் அடி நீளமுள்ள ஒடுபாதையில் 3 ஆயிரம் அடியை கடந்த பிறகே விமானம் தரையை தொட்டது என்பது தெரிய வந்துள்ளதாக அருண் கூறினார்.
தாமதமாக தரையை தொட்ட விமானம் ஓடுபாதையில் இருந்து சறுக்கி, பின் 3 துண்டுகளாக உடைந்துவிட்டதாகவும் கூறினார். விமானம் மேலும் சில அடிகள் தாண்டி சென்றிருந்தால் விபத்து இன்னும் மோசமானதாக இருந்திருக்கும் என்ற அவர், இவை எல்லாம் விமான விபத்து விசாரணைப் பிரிவு நடத்தும் விசாரணையின் முடிவில் தான் உறுதி செய்யப்படும் என தெரிவித்தார். டேபிள் டாப் ஓடுபாதையால் தான் விபத்து ஏற்பட்டது என்று கூறுவது சரியல்ல எனவும் அவர் தெரிவித்தார்.
Comments