பெண் எழுத்தர் பியூலா தான் என் கணவர் மரணத்திற்கு காரணம் -பால்துரையின் மனைவி

0 65068

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கில் கைதான சிறப்பு உதவி ஆய்வாளர் பால்துரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளார்.

சாத்தான்குளம் தந்தை மகன் ஜெயராஜ் பென்னிக்ஸ் கொலை வழக்கில் காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 10 போலீசார் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கபட்டனர். எஸ்.எஸ்.ஐ பால்துரைக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டதையடுத்து மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதுதொடர்பாக பேசிய அவரது மனைவி மங்கையர் திலகம், தனது கணவரின் மரணத்துக்கு பெண் எழுத்தர் பியூலா, காவலர் சேவியர் மற்றும் தட்டார்மடம் காவல்நிலைய ஆய்வாளர் ஹரிஸ் ஆகியோர் தான் காரணம் எனவும், தனது கணவர் இறக்கும் முன்பு அவர்கள் மூவருக்கும் தண்டனை வாங்கி கொடுங்கள் என தம்மிடம் கூறிவிட்டு இறந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments