விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்களுக்கு, சல்யூட் அடித்து மரியாதை செய்த போலீசார்
கேரளாவில் விமான விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தனிமைப்படுத்தப்பட்டு உள்ள இளைஞர்களை போலீசார் தேடி சென்று மரியாதை செய்தனர்.
கோழிக்கோட்டில் தரையிறங்க முயன்ற விமானம் கீழே விழுந்து நொறுங்கி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் விமானத்தின் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் சி ஐ எஸ் எப் காவலர்களும், உள்ளூர் பொதுமக்களும் முனைப்புடன் செயல்பட்டனர். மீட்கப்பட்ட பயணிகளில் இருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்ட உள்ளூர் இளைஞர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர் இதையறிந்த சி ஐ எஸ் எப் வீரர்களும், உள்ளூர் போலீசாரும் குறிப்பிட்ட இளைஞர்கள் தங்கியுள்ள வீட்டிற்கு நேரடியாகச் சென்று சல்யூட் அடித்து அவர்களுக்கு மரியாதை செய்தனர்.
Several civilians had to be quarantined after the rescue efforts since two passengers had tested positive for #coronavirus.https://t.co/Au7s02Qua1
— Hindustan Times (@htTweets) August 9, 2020
Comments