ஈரானில் சீனா நுழைவதால் மத்திய கிழக்காசியா நிலைகுலையும்-அமெரிக்கா எச்சரிக்கை
முதலீடு என்ற பெயரில் சீனா ஈரானில் நுழைவது மத்திய கிழக்கு ஆசியாவை நிலைகுலைய செய்து விடும் என அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பயங்கரவாத த்தை ஊக்குவிக்கும் பெரிய நாடாக ஈரான் இருப்பதாக தெரிவித்துள்ள அவர், சீனாவின் பணமும், ஆயுதங்களும் அங்கு நுழைவதால், அது மேலும் அதிகரிக்கும் என கூறியுள்ளார்.
உலக நாடுகளுக்கு சீன கம்யூனிஸ்ட் கட்சியால் அச்சுறுத்தல் எற்பட்டிருப்பது தெளிவாக தெரிவதாக கூறிய அவர், அதற்கு எதிராக ஒத்த கருத்துள்ள நாடுகள் ஒன்றிணைந்து தங்களது சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ள்ளார்.
Comments