சீன எல்லையில் சினூக் ஹெலிகாப்டர்களைக் களமிறக்கிய இந்தியா
காஷ்மீரில் சீனா ஆக்கிரமித்துள்ள அக்சாய் சின் பகுதியில் சீனா படைபலத்தைப் பெருக்கி வரும் நிலையில் அப்பகுதியில் இந்திய விமானப்படை சினூக் ஹெலிகாப்டரைப் பணியில் ஈடுபடுத்தியுள்ளது.
காஷ்மீரில் சீனா ஆக்கிரமித்த அக்சாய் சின் பகுதியில் சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளில் ஈடுபட்டு வருகிறது. அத்துடன் எல்லைக் கட்டுப்பாட்டுப் பகுதியில் படைபலத்தை அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்திய ராணுவத்தின் கடைசி முகாமான தவுலத் பேக் ஆல்டி என்னுமிடத்தில் விமானப்படையின் சினூக் ஹெலிகாப்டர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
நாட்டின் வடக்கில் சீனாவுடனான எல்லைப் பகுதியில் நிலைமை மோசமடைந்துள்ள நிலையில், இந்த ஹெலிகாப்டர்கள் இரவில் அப்பகுதியில் பறந்து வருவது இந்தியாவின் படைவலிமையைச் சீனாவுக்கு உணர்த்தும் வகையில் உள்ளது.
Comments