ராமர் நேபாளத்தில்தான் பிறந்தார் என்று மீண்டும் கூறி சர்ச்சையை எழுப்பியுள்ள சர்மா ஒலி

0 4324
இறைவன் ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்று கூறி அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

இறைவன் ராமர் நேபாளத்தில் பிறந்தவர் என்று கூறி அந்நாட்டு பிரதமர் கே.பி. சர்மா ஒலி மீண்டும் சர்ச்சையை எழுப்பியுள்ளார்.

நேபாள கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகிகளுடனான ஆலோசனையின்போது,  நேபாளத்தின் அயோத்தியாபுரியில்தான் ராமர் பிறந்தார் எனவும், இந்தியாவின் அயோத்தியில் பிறக்கவில்லை எனவும் கூறியுள்ளார்.

அயோத்தியாபுரியை ராமர் பிறப்பிடமாக கூறி, அந்த இடத்தின் புகழை பரப்பும்படியும், அங்கு வைக்க ராமர் சிலையை தயாரிக்கும்படியும் கேட்டுக் கொண்டுள்ளார். இதுபோல ராமர் பிறப்பிடம் குறித்து சர்மா ஒலி பேசுவது இது 2ஆவது முறையாகும். இதற்கு நேபாளத்திலுள்ள மதத் தலைவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அயோத்தியில் அண்மையில் ராமர்கோயில் பூமி பூஜையில் கலந்து கொண்ட நேபாளத்தின் ஜானகி கோயில் அர்ச்சகர் ஆச்சார்யா துர்கா பிரசாத் கெளதம், சர்மா ஒலியின் கருத்து அபத்தமானது ((claim as absurd)) என கூறியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments