கோழிக்கோடு விமான நிலைய ஓடுபாதையை நீட்டிக்க ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவிப்பு

0 2390
விமான நிலைய ஒடுபாதை நீளத்தை அதிகரிக்க வேண்டும் என கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகளிடம் சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

விமான நிலைய ஒடுபாதை நீளத்தை அதிகரிக்க வேண்டும் என கோழிக்கோடு விமான நிலைய அதிகாரிகளிடம் சில ஆண்டுகளுக்கு முன்னரே அறிவுறுத்தப்பட்டதாக விமானப் போக்குவரத்து இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

கடந்த வெள்ளி அன்று  ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஓடுபாதையில் இருத்து விலகி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளனதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள விமானப் போக்குவரத்து இயக்குநரகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது. 2016 ல் ஓடுபாதை தளம் வலுப்படுத்தப்பட்டாலும், இடம் எடுப்பதில் உள்ள அதிகப்படியான பணச்செலவு மற்றும் உள்ளூர் மக்களின் எதிர்ப்பு காரணமாக ஓடுபாதையை நீட்டிக்கும் திட்டம் நிறைவேறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments