நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் பலி

0 2135
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 64 ஆயிரத்து 399 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 861 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் நாட்டில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 21 லட்சத்து 53 ஆயிரத்து 11ஆகவும், பலியானோரின் எண்ணிக்கை 43 ஆயிரத்து 379ஆகவும் அதிகரித்துள்ளது.

நாடு முழுவதும் 6 லட்சத்து 28 ஆயிரத்து 747 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெறும் நிலையில், மருத்துவ சிகிச்சையில்  இதுவரை 14 லட்சத்து 80 ஆயிரத்து 885 பேர் குணமாகியுள்ளனர். 

நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 7 லட்சத்து 19 ஆயிரத்து 364 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து இதுவரை 2 கோடியே 41 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு பரிசோதனை நடத்தப்பட்டிருப்பதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments