பிரேசிலில் கொரோனாவால் இதுவரை ஒரு லட்சம் பேர் பலி
பிரேசில் நாட்டில் கொரோனா பலி எண்ணிக்கை ஒரு லட்சத்தினை கடந்த நிலையில், உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி தெரிவிக்கும் வகையில் சிவப்பு நிற பலூன்கள் வானில் பறக்கவிடப்பட்டன.
ரியோ டி ஜெனீரோவில் உள்ள Copacabana கடற்கரையில் அரசு சாரா அமைப்பின் சார்பில் இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த கடற்கரை பகுதி முழுவதும் சிவப்பு நிற பலூன்கள் மணலில் நடப்பட்டிருந்த சிலுவையில் கட்டப்பட்டிருந்தது.
பின்னர் கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் ஒரே நேரத்தில் ஆயிரம் பலூன்களும் வானில் பறக்கவிடப்பட்டன. இதன் காரணமாக வான்பரப்பு முழுவதும் ஒரே செந்நிறமாக காட்சி அளித்தது. பிரேசிலில் கொரோனாவால் இதுவரை 29 லட்சத்து 62ஆயிரத்து 442பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Brazil's coronavirus death toll passes 100,000: health ministry https://t.co/p0JKFzA9qA pic.twitter.com/oWQANI1p9m
— Reuters (@Reuters) August 8, 2020
Comments