லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி அளித்த 6 பேர் கைது

0 3111
ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி அளித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜம்மு காஷ்மீரில் லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாத அமைப்புக்கு நிதி உதவி அளித்த 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த ஜம்மு காவல்துறை தலைவர் முகேஷ் சிங், ஜம்முவில் தீவிரவாத அமைப்புக்கு உதவுகின்ற முடஸ்ஸர் பரூக் பத் என்பவர் பிடிபட்டதாகவும், அவரிடம் நடத்திய விசாரணையில் மேலும் 5 பேர் சிக்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

கடந்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளாக இவர்கள் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு பணப் பரிவர்த்தனைகள் மேற்கொண்டதாகவும் அவற்றில் சில மும்பை வழியாகவும் மின்னணு முறை மூலமாகவும் மாற்றப்பட்டதாக முகேஷ் சிங் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டவர்கள் மூலம் லஷ்கர்-இ-தொய்பா அமைப்புக்கு நடத்தப்படும் பணப் பரிவர்த்தனைகளின் ஒரு பகுதி உடைக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments