எங்களைத் தாக்கினால் அணு ஆயுதத் தாக்குதலுக்கு நிகரான பதிலடி - ரஷ்யா
தங்கள் நாட்டின் எல்லைப்பகுதிக்குள் ஏவப்படும் எந்த ஏவுகணையையும் அணுசக்தி தாக்குதலாக கருதி பதிலடி தரப்படும் என ரஷ்யா எச்சரித்துள்ளது.
ரஷ்ய ராணுவத்தின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான கிராஸ்னயா ஸ்வெஸ்டாவில்,ஏவுகணை ஏவுதல் குறித்த தகவல்கள் தானாகவே ரஷ்ய ராணுவ மற்றும் அரசியல் தலைமைக்கு அனுப்பப்படும் என்றும், இது வளர்ந்து வரும் சூழ்நிலையை பொருத்து அணுசக்தி தாக்குதலுக்கு நிகரான பதிலடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவை அச்சுறுத்தும் வகையில் அணுசக்தி இன்றி நீண்ட தூர இலக்கை தாக்கும் ஏவுகணைகளை அமெரிக்கா தயாரிப்பதாக வாஷிங்டன் போஸ்ட் பத்திரிக்கையில் எழுதப்பட்டதற்கு எதிர்மறையாகவே ரஷ்ய பத்திரிக்கையில் இவ்வாறு கருத்து தெரிவிக்க பட்டிருக்கலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்துள்ளனர்.
Comments