மேலும் ஒரு மத்திய அமைச்சருக்கு கொரோனா தொற்று உறுதி
நாடாளுமன்ற விவகாரங்களுக்கான மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வாலுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த சில தினங்களுக்கு முன்பு கொரோனா சோதனை செய்து கொண்டதாகவும், அப்பொழுது எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்த நிலையில் தற்போது இரண்டாம் முறையாக எடுக்கப்பட்ட சோதனையில் தனக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தான் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உடல்நிலை நன்றாக இருப்பதாகவும் அர்ஜுன்ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
Comments