இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று மீண்டும் பதவி ஏற்பு
இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று மீண்டும் பதவி ஏற்கிறார். 225 உறுப்பினர்களை கொண்ட இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5-ந் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு இடங்களை வென்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றி உள்ளது.
அந்த கட்சிக்கு 145 இடங்களும், கூட்டணி கட்சிகளுக்கு 5 இடங்களும் கிடைத்தன. இதைத் தொடர்ந்து மீண்டும் இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்.
பதவி ஏற்பு விழா கெலனியா ராஜமகா விகாராய புத்த கோவில் வளாகத்தில் நடக்கிறது. புதிய நாடாளுமன்றம் வருகிற 20-ந் தேதி கூடும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
Comments