அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா, ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றச்சாட்டு

0 3673
அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது. நவம்பர் மாதம் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அமெரிக்க தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்க புலனாய்வுத்துறை கூறி உள்ளது. நவம்பர் மாதம் 3ம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது.

அதில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கும், முன்னாள் அமெரிக்க துணை அதிபர் ஜோ பிடனுக்கும் கடும் போட்டி நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலில் சீனா, ரஷியா மற்றும் ஈரான் நாடுகள் செல்வாக்கு செலுத்த முயற்சிப்பதாக அமெரிக்க உயர் உளவுத்துறை தலைவர் வில்லியம் இவானினா (William Evanina) எச்சரித்துள்ளார்.

இது தொடர்பான அவரது அறிக்கையில் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வெற்றி பெற சீனா விரும்பவில்லை என்றும், ஜோ பிடனை சிறுமைப்படுத்த ரஷியா விரும்புகிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

வாக்காளர் விருப்பங்களைத் திசைதிருப்பவும், அமெரிக்க கொள்கைகளை மாற்றவும், கருத்து வேறுபாட்டை அதிகரிக்கவும் அந்நாடுகள் முயற்சிப்பதாகவும் வில்லியம் இவானினா குற்றம்சாட்டியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments