தஞ்சாவூர் அரசு மருத்துவமனைக்கு அகரம் அறக்கட்டளை ரூ. 25 லட்சம் நன்கொடை!

0 4907

நடிகை ஜோதிகா தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ரூ. 25 லட்ச நன்கொடை வழங்கியதற்கு சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு படப்பிடிப்புக்காக தஞ்சாவூர் சென்றிருந்த போது அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையை நடிகை ஜோதிகா பார்வையிட்டார். பிரசவத்துக்காகச் சேர்க்கப்படும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் நல்ல முறையில் கவனிக்கப்பட என்ன என்ன உதவிகள் தேவை என்பதையும் ஜோதிகா கேட்டறிந்தார். தொடர்ந்து தன் பங்களிப்பாக ரூ. 25 லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு ஜோதிகா வழங்கியுள்ளார்.

அகரம் அறக்கட்ளை மற்றும் ஜோதிகா சார்பில் வழங்கப்பட்ட மருத்துவ உபகரணங்களை டைரக்டர் இரா.சரவணன் வழங்க சுகாதாரத் துறை அமைச்சர் மாண்புமிகு விஜயபாஸ்கர் பெற்றுக் கொண்டார். இது குறித்து விஜயபாஸ்கர் கூறுகையில் “ஜோதிகா செய்திருக்கும் உதவி மகத்தானது. பாராட்டத்தக்கது. அரசின் சார்பில் நன்றி” என்றார்

மருத்துவமனை டீன் மருதுதுரை கூறுகையில், “தாய்மார்கள், குழந்தைகள் நலனுக்காக 25 லட்ச ரூபாய் வழங்கிய ஜோதிகாவின் நல்ல மனதுக்கு நன்றி. அரசின் திட்டங்களுடன் மக்களின் பங்களிப்பும் கைகோக்கும்போது திட்டங்கள் சிறப்பாக அமையும் என்பதற்கு ஜோதிகா செய்த உதவி சரியான முன்னுதாரணம்.” என்றார்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments