யுபிஎஸ்சி தேர்வில் முதல்முயற்சியிலேயே வெற்றி பெற்ற விவசாயியின் மகள்
உத்தரகாண்டில் மின்சாரம், சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லாத கிராமத்தை சேர்ந்த விவசாயியின் மகளான 28 வயது இளம்பெண் ஒருவர், யுபிஎஸ்சி தேர்வில் முதல் முயற்சியிலேயே வெற்றி பெற்றுள்ளார்.
மாநிலத்திலுள்ள பின்தங்கிய பகுதியான ராம்பூர் கிராமத்தில் போதிய சாலை வசதி, மின்சார வசதி, செல்போன் இணைப்பு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லாத நிலை காணப்படுகிறது.
இருப்பினும் அக்கிராமத்தை சேர்ந்த விவசாயி திவான் ராமின் (Diwan Ram) மகளான குமாரி பிரியங்கா, தனது தந்தையின் விவசாய பணிக்கு பல ஆண்டுகளாக உதவியபடியே விடா முயற்சியுடன் படித்து வந்தார். பிஏ பட்டப்படிப்பும், பிறகு சட்டப்படிப்பும் முடித்த அவர், யுபிஎஸ்சி தேர்வை முதன்முறையாக எழுதி, அதில் 257வது ரேங்க் வந்துள்ளார்.
Comments