தேசியக் கல்வி கொள்கை 2020: பிரதமர் மோடிக்கு மு.க. ஸ்டாலின் கடிதம்
தேசியக் கல்வி கொள்கை 2020-ஐ நடைமுறைப்படுத்தும் முடிவை நிறுத்தி வைக்கக்கோரி பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் சமஸ்கிருதத்தைக் கட்டாய விருப்பப் பாடமாகக் கொண்ட மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும், இந்த நடவடிக்கை தமிழ் மொழியின் பெருமை மற்றும் மாண்பைக் குறைப்பதுடன், தமிழ் மக்களின் உணர்வுகளை அவமதிப்பதாக உள்ளது என்றும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து விவாதிக்க மற்றும் விமர்சன ரீதியாக பகுப்பாய்வு செய்ய, ஓர் ஆலோசனைச் செயல்முறையை மீண்டும் நிறுவ வேண்டும் எனவும், தேசிய கல்விக் கொள்கை 2020-ஐ மறுவடிவமைத்து, நாடாளுமன்ற அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரியுள்ள அவர், அரசமைப்புச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள உரிய செயல்முறைகளைப் பின்பற்றுவதற்கு உகந்த சூழ்நிலை ஏற்படும் வரை நிறுத்தி வைக்கவும் வலியுறுத்தியுள்ளார்.
Comments