காவிரியில் நீர்வரத்து அதிகரிப்பு..! மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு
கர்நாடகத்தில் இருந்து காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் வெள்ளம் ஆர்ப்பர்க்கிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 70 அடியைத் தாண்டியது.
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி நொடிக்கு 48 ஆயிரம் கன அடியாக இருந்தது. ஒகேனக்கல்லின் அனைத்து அருவிகளும் தெரியாத அளவுக்கு அதிக அளவு வெள்ளம் பாய்கிறது. அருவிகளுக்குச் செல்லும் பாதைகளும் தண்ணீரில் மூழ்கியுள்ளன. நீர்வரத்து படிப்படியாக மேலும் அதிகரிக்கும் என்பதால் ஆற்றோரம் உள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து நொடிக்கு 45 ஆயிரம் கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர்மட்டம் 70 அடியைத் தாண்டியுள்ளது. அணையின் நீர் இருப்பு 32 புள்ளி 7 டிஎம்சியாக இருந்தது. அணையில் இருந்து பாசனத்துக்கு நொடிக்கு ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
Comments