நரேந்திர மோடி இந்தியாவின் சிறந்த பிரதமர்; வாஜ்பாய்க்கு இரண்டாவது இடம் - MOTN ஆய்வில் தகவல்

0 29239

ரேந்திர மோடி இந்தியாவின் மிகச்சிறந்த பிரதமர் என்றும் அடுத்த இடத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் உள்ளார் என்றும் Karvy Insights Mood of the Nation (MOTN) அமைப்பு நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஆய்வு முடிவில் 44 சதவிகித இந்தியர்கள் நரேந்திர மோடியை சிறந்த பிரதமர் என்று வாக்களித்துள்ளர். 14 சதவிகித வாக்குகளுடன் வாஜ்பாய் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி 12 சதவிகித வாக்குகளுடன் மூன்றாவது இடத்திலும் மன்மோகன் சிங் 7 சதவிகித வாக்குகளுடன் நான்காம் இடத்திலும் உள்ளனர். லால் பகதூர் சாஸ்திரிக்கு 5 சதவிகித வாக்குகள் கிடைத்துள்ளது.

ஜனவரி மாதத்தில் நடந்த ஆய்வை விட  தற்போதைய ஆய்வில் 10 சதவிகித வாக்குகளை நரேந்திர மோடி கூடுதலாகப் பெற்றுள்ளார். கடந்த ஆய்வில் பிரதமர் மோடிக்கு 34 சதவிகித வாக்குகளும் இந்திரா காந்திக்கு 16 சதவிகித வாக்குகளும் கிடைத்திருந்தன. வாஜ்பாய்க்கு 13 சதவிகித வாக்குகளும் ஜவஹர்லால் நேருவுக்கு 8 சதவிகித வாக்குகளும் ராஜீவ் காந்திக்கு 5 சதவிகித வாக்குகள் கிடைத்திருந்தன.

image

2016- ம் ஆண்டு ஜூலை மாதத்தில் நடந்த ஆய்வில் இந்திரா காந்தி 23 சதவிகித வாக்குகள் பெற்று முதலிடத்தில் இருந்தார். 18 சதவிகித வாக்குகளுடன் வாஜ்பாய் இரண்டாவது இடத்திலும் 17 சதவிகித வாக்குகளுடன் மோடி மூன்றாவது இடத்திலும் இருந்தனர். இந்த நான்கு ஆண்டுகளில் மோடியின் செல்வாக்கு மக்கள் மத்தியில் அபரிதமாக உயர்ந்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்தியாவின் அடுத்த பிரதமராக மோடியே வருவார் என்று 66 சதவிகித மக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பிரதமராகும் விஷயத்தில் ராகுல் காந்தி பிரதமராவார் என்று 8 சதவிகித மக்களும் சோனியா காந்தி பிரதமராவார் என்று 5 சதவிகித மக்களும் நம்பிக்கை கொண்டுள்ளனர். அமித் ஷா பிரதமராவார் என்று 4 சதவிகித மக்கள் நம்புகின்றனர். 

கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் இந்திய சுகாதாரத்துறை மீது 77 சதவிகித மக்கள் நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர். 18 சதவிகித மக்கள் இந்தியா சுகாதாரத்துறையை நம்பவில்லை என்றும் கருத்து கூறியுள்ளனர்.

காங்கிரஸ் கட்சியை வழி நடத்த ராகுல் காந்தியே சரியானவர் என்று 23 சதவிகித மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

டெல்லியைச் சேர்ந்த Karvy Insights Mood of the Nation அமைப்பு சார்பாக கடந்த ஜூலை 15 முதல் ஜூலை 27-ந் தேதி வரை இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்தியாவின் 19 மாநிலங்களில் 97 நாடாளுமன்ற 194 சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த 12,201 பேரிடத்தில் நடத்தப்பட்ட ஆய்வில் இந்த முடிவு தெரிய வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments