நீலகிரி வெள்ளச்சேதங்களை ஆய்வு செய்து விட்டு கிளம்பிய அமைச்சர்கள் பாதையை மறித்து நின்ற காட்டு யானை
நீலகிரி மாவட்டத்தில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்து விட்டு கிளம்பிய அமைச்சர்கள் காரை காட்டு யானை ஒன்று வழிமறித்தது.
உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் உதகை மாவட்டத்திற்கு நேரடியாக சென்று மண்சரிவு, போக்குவரத்து பாதிப்பு, வெள்ள சேதம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டனர்.
இப்பணிகளை முடித்துக்கொண்டு இரவு திரும்பும் வழியில் பர்லியார் அருகே திடீரென காட்டு யானை ஒன்று சாலையில் நின்று கொண்டே வாகனத்தை வழிமறித்தது. அதனை தொடர்ந்து அவருடைய பாதுகாப்பு வாகனங்கள் மூலம் சத்தம் எழுப்பியதும் யானை காட்டுக்குள் சென்றது.
Comments