தமிழ்நாடு முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல்
தமிழ்நாடு முழுவதும் நாளை ஒருநாள், தளர்வுகளற்ற முழு ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த ஜூலை மாதத்தை தொடர்ந்து ஆகஸ்ட் மாதத்திலும், ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளிலும், தளர்வற்ற முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதலமைச்சர் அறிவித்தார்.
இதன்படி நாளை தளர்வற்ற முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகிறது. அத்தியாவசிய பொருட்கள் உட்பட அனைத்துக் கடைகளும் மூடப்படும். பால் விநியோகம், மருந்தகங்கள், மருத்துவமனைகள், மருத்துவமனை ஊர்திகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அரசு வாகனங்கள் தவிர, பிற, அனைத்துவகை தனியார் வாகனங்களுக்கும் அனுமதி கிடையாது. தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள பெட்ரோல் பங்குகள் உட்பட அனைத்து பெட்ரோல் பங்குகளும் மூடப்பட்டுள்ளன.
தமிழ்நாடு முழுவதும் நாளை தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல் | #lockdown | #TamilnaduLockdown https://t.co/Ny153LHeER
— Polimer News (@polimernews) August 8, 2020
Comments