நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 933 பேர் பலி
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 61 ஆயிரத்து 537 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதேபோல் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவுக்கு 933 பேர் பலியாகியுள்ளனர்.
இதனால் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20 லட்சத்து 88 ஆயிரத்து 612 ஆகவும், கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 42 ஆயிரத்து 518ஆகவும் அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவுக்கு 6 லட்சத்து 19 ஆயிரத்து 88 பேர் சிகிச்சை பெறும் நிலையில், 14 லட்சத்து 27 ஆயிரத்து 6 பேர் குணமாகியுள்ளனர்.
நாடு முழுவதும் நேற்று ஒரேநாளில் 5 லட்சத்து 98 ஆயிரத்து 778 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதையும் சேர்த்து, நாடு முழுமைக்கும் இதுவரை 2 கோடியே 33 லட்சத்து 87 ஆயிரத்து 171 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
Comments