மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும்-அரவிந்த் கெஜ்ரிவால்
மின்சாரத்தில் இயங்கும் கார்களை வாங்குவோருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று டெல்லி முதலமைச்சர் அறிவித்துள்ளார்.
டெல்லி அரசின் மின்சார வாகன கொள்கை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மின்சார வாகனங்களுக்கான சாலை வரி, பதிவு கட்டணம் ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார வாகனப் பயன்பாட்டை அதிகரிப்பதற்கான, ஒன்றரை லட்சம் ரூபாய் வரை ஊக்கத் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பேசிய முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், டெல்லியில் காற்று மாசுவை குறைக்கும் நோக்கிலும், வேலைவாய்ப்பை அதிகரிக்கும் எண்ணத்திலும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
Comments