பண மோசடி வழக்கில் காவல் நிலையத்தில் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ஆஜர்
ராமநாதபுரம் பஜார் காவல் நிலையத்தில் பண மோசடி தொடர்பான வழக்கில் சினிமா தயாரிப்பாளர் ஞானவேல் ஆஜரானார். ராமநாதபுரத்தில் நிதி நிறுவனம் மூலம் 3 கோடி ரூபாய் மோசடி செய்ததாக நீதிமணி, மேனகா, ஆனந்த் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக விசாரிக்க தயாரிப்பாளர் ஞான வேல் ராஜாவுக்கு சம்மன் அனுப்பினர்.
கைது செய்யப்படுவதை தவிர்க்க முன்ஜாமின் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஞானவேல் ராஜா மனு தாக்கல் செய்தார். அதில், தான் ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் நடத்தி வருவதாகவும் மகாமுனி திரைப்படத்தின் திரையரங்க உரிமைக்காக 6 கோடியே 25 லட்ச ரூபாய்க்கு ஒப்பந்தம் போடப்பட்டதாகவும் இந்த நிலையில் தவறுதலாக நீதிமணி மீதான பண மோசடி புகாரில் தான் தொடர்பு படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இதையடுத்து, தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவை இம்மாத 14 ஆம் தேதி வரை கைது செய்ய இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
Comments