கிழக்கு லடாக்கில் தொடர்ந்து வீரர்களை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டம்
லடாக்கின் கிழக்கு பகுதியில் சீனா தனது படைகளை விலக்கிக் கொண்டு ஏப்ரல் 20ம் தேதிக்கு முந்தைய நிலையை ஏற்படுத்தாதவரை அங்குள்ள 1,597 கிலோ மீட்டர் தூர எல்லை கட்டுப்பாடு கோட்டு பகுதியிலும் வீரர்களை நிறுத்தி வைக்க இந்திய ராணுவம் திட்டமிட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கால்வன் பள்ளத்தாக்கு மோதல் சம்பவத்தால் இருநாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவுகிறது. இந்த பதற்றத்தை தணிப்பது குறித்து இருநாடுகளின் ராணுவ கமாண்டர்கள் மட்டத்தில் அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
அப்போது, கோக்ரா அருகே உள்ள குக்ராங் நதி அருகே சீன வீரர்கள் இருக்க விரும்புவதாகவும், பான்காங் ட்சோவில் ((Pangong Tso)) பிங்கர் 4 முதல் 8 வரையிலான இடங்களில் இந்திய துருப்புகள் திரும்பிச் செல்ல வேண்டும் என புதிய திட்டத்தை சீனா முன்வைத்ததாக கூறப்படுகிறது. ஆனால், அதை ஏற்க முடியாது என இந்திய கமாண்டர்கள் நிராகரித்து விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments