மின்சார வாகன உற்பத்திக்கு தனி தொழிற் பூங்காவை அமைக்கிறது தமிழக அரசு
மின்சார வாகன தயாரிப்புக்கு என்று தனியான தொழிற்பூங்காவை அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதில் சுமார் 50 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கும் அரசு, முதலீடுகளை கவரும் வகையில் பல ஊக்கத் திட்டங்களையும் அறிவித்துள்ளது. இதன் மூலம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என கிண்டி தொழில்வழிகாட்டு மையத்தில் உள்ள ஆட்டோ சிஎக்ஸ்ஓ ரவுண்ட்டேபிள் நிர்வாக இயக்குநர் நீரஜ் மிட்டல் தெரிவித்துள்ளார்.
இந்த மின்சார வாகன தொழிற்பூங்கா 300 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும். அங்கு முதலீடு செய்பவர்களுக்கு 100 சதவிகிதம் ஜிஎஸ்டி திரும்ப அளிக்கப்படுவதுடன், முதலீட்டு மூலதனத்தில் 50 சதவிகிதம் மானியமாகவும் வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கான வசதி, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சிறந்த சுற்றுச்சூழல் ஆகியன தமிழகத்தை ஆட்டோ தொழிற்துறையின் முக்கிய மையமாக மாற்றியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
Comments