இலங்கை தாதா அங்கொட லொக்கா மரண விவகாரத்தில் புதிய தகவல்

0 3060

இலங்கை நிழல் உலக தாதா அங்கொட லொக்கா பிளாஸ்டிக் சர்ஜரி செய்து தோற்றத்தை மாற்றி கோவையில் சுற்றித் திரிந்ததாக தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவனுக்கு அடைக்கலம் கொடுத்த மதுரை வழக்கறிஞர் சிவகாம சுந்தரியின் பெற்றோர், முன்னாள் கணவர் மற்றும் வீட்டு உரிமையாளரிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

சினிமாவில் நடிக்க இருப்பதாக கூறி அங்கொட லொக்கா மூக்கை பெரிதுபடுத்தும் அறுவை சிகிச்சை செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. கோவையில் அவன் உடற்பயிற்சி மேற்கொண்ட ஜிம் ஒன்றிலும் விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே மதுரையில் வழக்கறிஞர் சிவகாம சுந்தரி தங்கியிருந்த 5 வீடுகளில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டனர். வீட்டு உரிமையாளர்கள், சிவகாம சுந்தரியின் பெற்றோர், அவரது முன்னாள் கணவர் வினோதகன் ஆகியோரை சிபிசிஐடி அலுவலகம் வரைவழைத்தும் விசாரணை நடைபெற்றது.

விசாரணைக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த வினோதகன், சிவகாம சுந்தரி மிகவும் மோசமானவர் என்றும் தன்னை கொலை செய்ய முயற்சித்தார் என்றும் கூறினார். இதனிடையே அங்கொட லொக்காவின் காதலி அம்மானி தான்ஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டார். சிவகாமசுந்தரி, தியானேஸ்வரன் ஆகியோர் கோவை சிறையில் அடைக்கப்பட்ட நிலையில், அம்மானி தான்ஜி வெளிநாட்டவர் என்பதால் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments


BIG STORY