தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்? முதலமைச்சர் பதில்
கொரோனா நோய் தாக்கம் முழுமைகயாக குறைந்தபின் பொதுப்போக்குவரத்து தொடங்கும் என்றும் அதன் பின்னர் இ பாஸ் ரத்து செய்யப்படும் என்றும் கூறியுள்ள முதலமைச்சர், அதுவரை இ பாஸ் நடைமுறையை எளிமையாக்க குழு அமைத்துள்ளதாகவும் கூறினார்.
நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்குப் பின் செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், சுற்றுச்சூழல் திருத்த சட்டம், புதிய கல்விக்கொள்கை ஆகியவற்றில் முடிவுகளை எடுக்க வல்லுனர் குழு நியமிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த குழுவின் அறிக்கை அடிப்படையில் அரசு முடிவு எடுக்கும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் இ பாஸ் நடைமுறை எப்போது முடிவுக்கு வரும்? முதலமைச்சர் பதில் #TamilNadu | #EPass | #CMEdappadiPalaniswami | https://t.co/ci08VHUF48
— Polimer News (@polimernews) August 7, 2020
Comments