ஆக்ஸ்போர்டு பல்கலை.யின் கொரோனா தடுப்பூசி.. ஒரு டோசின் விலை ரூ225?
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்டின் விலை ஒரு டோசுக்கு 225 ரூபாயாக இருக்கும் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தடுப்பூசியின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட கிளினிகல் சோதனைகளைக்கு இந்தியாவில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த சோதனைகளை புனேயில் உள்ள சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா நடத்துகிறது.
பில்-மெலிண்டா அறக்கட்டளையின் உதவியுடன் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் தேவைக்காக பத்து கோடி டோசுகளை உற்பத்தி செய்யவும் சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
கோவிஷீல்டு உள்ளிட்ட ஆறு கொரோனா தடுப்பூசிகள் 3ஆம் கட்ட சோதனையில் உள்ளன என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
Serum Institute of India (SII) enters into a new landmark partnership with Gavi, The Vaccine Alliance and the Bill & Melinda Gates Foundation, to accelerate the manufacture and delivery of up to 100 million doses of #COVID19 vaccines for India and low & income countries: SII pic.twitter.com/U8PIOIyj0w
— ANI (@ANI) August 7, 2020
Comments