புதிய கல்விக்கொள்கை ஏன்? - பிரதமர் மோடி விளக்கம்..!
இளம் மாணாக்கர்கள் தாய் மொழியில் கல்வி கற்பிப்பதை ஊக்குவிக்க உள்ளதாகவும், மாணவர்களின் திறனை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
தேசியக் கல்விக் கொள்கையின் கீழ் உயர்கல்வியில் சீர்திருத்தங்கள் என்னும் பெயரில் நடைபெற்ற காணொலிக் கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றுப் பேசினார்.
அப்போது, 4 ஆண்டுகளில் லட்சக்கணக்கானோரின் கருத்துரைகளைப் பரிசீலித்து, விரிவான விவாதங்கள் நடத்தியபின் தேசியக் கல்விக் கொள்கைக்கு ஒப்புதல் அளித்திருப்பதாகக் குறிப்பிட்டார். தாளில் கூறப்பட்டுள்ள பெரிய சீர்திருத்தங்களை எப்படி நடைமுறைப்படுத்த முடியும் எனச் சிலர் கேள்வி எழுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.
தேசியக் கல்விக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதில், இதனுடன் நேரடித் தொடர்புடையோரின் பங்கு முதன்மையானது எனக் குறிப்பிட்டார். இதை முழுமையாக நடைமுறைப்படுத்த உறுதிபூண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
கல்விக் கொள்கை பற்றிய நல்ல விவாதங்களால் கல்வி முறைக்கு மேலும் நன்மைகள் கிடைக்கும் எனக் குறிப்பிட்டார். தேசியக் கல்விக் கொள்கை ஒருசார்பானது என்றோ, பக்கச் சார்பானது என்றோ எவரும் சந்தேகம் எழுப்பவில்லை எனத் தெரிவித்தார்.
மேலும் இளம் மாணாககர்கள் தாய் மொழியில் கல்வி கற்பிப்பதை ஊக்குவிக்க உள்ளதாகவும், மாணவர்களின் திறனை உலகத்தரத்திற்கு மேம்படுத்த புதிய கல்விக் கொள்கை வழிவகுக்கும் என்றும் மோடி கூறியுள்ளார்.
Comments