ஒரே இரவில் கோடீஸ்வரரான சுரங்கத் தொழிலாளி..!

0 9808

மத்தியப்பிரதேசத்தில் சுரங்கத் தொழிலாளி ஒருவர் 3 வைரக்கற்களை கண்டு எடுத்ததன் மூலம் ஓரே இரவில் கோடிஸ்வரராக உயர்ந்துள்ளார்.

பன்னா மாவட்டத்தில் உள்ள ஆழமற்ற சுரங்கம் ஒன்றில் சுபால் என்ற தொழிலாளி ஒருவர் பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது ஏழரை காரட் மதிப்பிலான 3 வைரக்கற்களை அந்த தொழிலாளி கண்டு எடுத்தார்.

இதனை அடுத்து அந்த வைரக்கற்களை சுரங்க அதிகாரியிடம் சுபால் ஒப்படைத்தார். இந்த வைரக்கற்கள் ஒவ்வொன்றும் 30 முதல் 35 லட்சம் ரூபாய் மதிப்புடையவை என்றும் அவை அரசு விதிப்படி ஏலம் விடப்பட்டு பின்னர் 12சதவீதம் வரிப்பிடித்தம் போக மீதி 88சதவீத தொகை அந்த தொழிலாளியிடம் ஒப்படைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments