திமுக எம்எல்ஏ இதயவர்மனுக்கு நிபந்தனை ஜாமீன்

0 3216

திருப்போரூர் துப்பாக்கி சூடு சம்பவத்தில் கைதான எம்.எல்.ஏ இதயவர்மன் உள்பட 11 பேருக்கு சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கியது.

நிலப் பிரச்சனையில் துப்பாக்கி சூடு நடத்திய வழக்கில் திருப்போரூர் சட்டமன்ற உறுப்பினர் இதயவர்மன் உள்பட 11 பேரும் ஜாமீன் கோரிய வழக்கை விசாரித்த நீதிபதி சதிஷ் குமார், துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர் குணமடைந்து வீடு திரும்பியதால் 11 பேருக்கும் ஜாமீன் வழங்குவதாக அறிவித்தார்.

சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனத்திற்கு எம்.எல்.ஏ இதயவர்மன் 3 லட்சம் ரூபாயை நன்கொடையாக வழங்க வேண்டும் என்றும், கைதான 11 பேரும் தலா 10 ஆயிரம் ரூபாய்க்கான சொந்த ஜாமீனும், அதே தொகைக்கான இருநபர் பிணை தொகையை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் செலுத்த வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

மறு உத்தரவு வரும் வரை இதயவர்மன் வேலூர் நகர காவல் நிலையத்திலும், மற்ற 10 பேர் திருப்போரூர் காவல் நிலையத்திலும் கையெழுத்திட வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments